July 11, 2026

சென்னை சேப்பாக்கத்தில் பிக் பேஷ் லீகின் நடப்பு சீசன் தொடங்கவுள்ளது

சிட்னி: கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடத்தும் பிக் பேஷ் லீக்-2026 ஆண்டுக்கான சீசனின் முதல் ஆட்டம் சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்​தோ​னேசி​யா, ஆஸ்​திரேலி​யா, நியூசிலாந்து ஆகிய நாடு​களில் பிரதமர் மோடி அரசு​முறைப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இந்​தோ​னேசி​யப் பயணத்தை முடித்​துக்​கொண்டு அவர் 8-ம் தேதி ஆஸ்​திரேலியா வந்​தடைந்​தார். மெல்​போர்​னில் அந்​நாட்​டுப் பிரதமர் அந்​தோனி அல்​பனீஸ், கவர்​னர் ஜெனரல் சாம் மோஸ்​டின் உள்​ளிட்​டோரை சந்​தித்​துப் பேசி​னார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

மூன்று நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, மூன்றாவது நாளான இன்று (ஜூலை 10) அந்​நாட்​டுப் பிரதமர் அந்​தோனி அல்​பனீஸ் உடன் மெல்பர்ன் மைதானத்துக்கு சென்றிருந்தார். அங்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ்-வை சந்தித்தார்.

இந்நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடத்தும் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் நடப்பு ஆண்டுக்கான சீசன் சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்​தோனி அல்​பனீஸ் அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே விளையாட்டு ரீதியான உறவின் விரிவடைந்து வருவதன் ஒரு பகுதி என்று அவர் இதனை குறிப்பிட்டார்.

பிஷ் பேஷ் லீக்

உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய டி20 லீக் தொடர்களில் ஒன்றாக பிஷ் பேஷ் லீக் தொடர் உள்ளது. இதில் ஆஸ்திரேலிய நாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்களும் அணியாக இணைந்து விளையாடுவார்கள். இந்த சூழலில்தான் பிக் பேஷ் லீக் 2026 சீசனின் முதல் ஆட்டம் சென்னை – சேப்பாக்கத்தில் தொடங்கவுள்ளது.

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் வெளிநாட்டு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக் பேஷ் லீக் (பிபிஎல்) தொடரில் இந்தியாவில் ஜியோ ஸ்டார் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த தொடர் நடைபெறுவதன் மூலம் முதலீடுகளை ஈட்டவும், பார்வையாளர்களை அதிகரிக்கவும் முடியும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா நம்புகிறது. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டத்தை ஆஸ்திரேலிய அரசு மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணைந்து நடத்துகின்றன. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆதரவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love