சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 28ம் தேதி தங்கம் கிராமுக்கு ரூ.155 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,215க்கும், பவுனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,720க்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்தது. அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.13155க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5240க்கும் விற்பனையானது. வெள்ளியை பொறுத்தவரையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.235க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,230க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,840க்கு விற்பனையானது. இதே போல வெள்ளி விலை நேற்று 2வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதனையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235க்கு விற்பனையாகிறது.

More Stories
இந்தியாவில் தங்கத்தின் தேவை 6% சரிவு: உலக தங்க கவுன்சில் தகவல்
கச்சா எண்ணெய் விலை உயர்வு
10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மலை காய்கறிகளின் விலை உயர்வு…