சோழவந்தான் ஏப்ரல் 20
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திருமூலநாதசுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கண்ணன் என்ற பரசுராமன் சிவாச்சாரியார் அர்ச்சகர் செந்தில் சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்த கால் நடப்பட்டது. தொடர்ந்து 26 ஆம் தேதி முதல் சுவாமி அம்பாள் நந்தி குதிரை யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற உள்ளது. இருபத்தி எட்டாம் தேதி திருக்கல்யாண வைபவம் 29ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது 30ஆம் தேதி வியாழக்கிழமை வைகை ஆற்றில் தீர்த்த வாரி உற்சவம் நடைபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி கார்த்திகை செல்வி தக்கார் மாலதி ஆய்வாளர் சாவித்ரி வைத்தியநாத சுப்பிரமணி ஐயர் குடும்பத்தார்கள் கோபால ஐயர் குடும்பத்தார்கள் ஆலய பணியாளர்கள் விழா கமிட்டியினர் மற்றும் தென்கரை கிராமத்தார்கள் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

More Stories
இராசிபுரம்:நன்றி மறக்க மாட்டோம்: உங்களுக்கே எங்கள் ஓட்டு… உழவர் சந்தையில் உதயசூரியனுக்கு வாக்கு கேட்ட மதிவேந்தனுக்கு மக்கள் கொடுத்த மகிழ்ச்சி செய்தி…
இளைஞர்களான விளையாட்டு அரங்கம்:
இராசிபுரம்:தேவாலயங்களில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன்… சிறப்பு பிரார்த்தனையுடன் ஆசிர்வாதம்.