ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் சாதனை குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் பதிவு..
ஜவுளி ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
“ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி!
குஜராத்தையும் மகாராஷ்டிரத்தையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம்!
2020-2021-இல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.Advertise with us
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 21.84%!
இவை அனைத்தையும் சொல்வது நாமல்ல, மத்திய அரசு! சாதனைகளைச் சொல்லி வெல்வோம் ஒன்றாக!” என்று பதிவிட்டுள்ளார்.

More Stories
ட்ரம்ப் விதித்த 10% இறக்குமதி வரி செல்லாது: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க அனுமதி கோரி ஆளுநரிடம் கடிதம்: 13-ம் தேதி முதல்வராக ரங்கசாமி பதவியேற்கிறார்
மே. வ தேர்தல் :உச்ச நீதிமன்றத்தை நாடும்திரிணாமுல் காங்கிரஸ் ?