July 22, 2026

தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.1680 அதிகரிப்பு

தங்கம் விலை நிலவரம்

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் இன்று (ஜூலை 22) பவுனுக்கு ரூ.1680 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இப்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று (திங்கட்கிழமை) தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 என்று அதிகரித்தது.

இன்றைய விலை நிலவரம்

இந்தச் சூழலில் தங்கம் விலை நேற்று காலை சென்னையில் வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,05,760-க்கும் விற்பனையாகிறது.

தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,430-க்கும், பவுனுக்கு ரூ.1680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,07,440-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.229 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,651-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,245-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

Spread the love