சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூலை 10) பவுனுக்கு ரூ.240 என்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது.
கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் ஜூன் மாத இறுதி மற்றும் ஜூலை மாத தொடக்கத்தின் முதல் சில நாட்கள் தங்கம் விலை உயர்ந்தது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று (ஜூலை 9) காலை வரையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 என்று குறைந்தது. நேற்று மாலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 என்று உயர்ந்தது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 என்று உயர்ந்திருந்தது.
இன்றைய விலை நிலவரம்
இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,350-க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,06,800-க்கும் விற்பனையாகிறது.
24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.33 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,564-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,170-க்கு விற்பனையாகிறது.
இன்று வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

More Stories
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 2 புதிய பாரத்பென்ஸ் பேருந்துகள் அறிமுகம்
ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணங்கள் என்னென்ன?
தங்கம் விலை தொடர்ந்து 4-வது நாளாக சரிவு: இன்றைய நிலவரம்