April 20, 2026

தமிழ்நாடு தேர்தல் 2026: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை -அர்ச்சனா பட்நாயக்!

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் சிறப்பு பார்வையாளர் இன்று (ஏப். 20) ஆலோசனையில் ஈடுப்பட உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஏப்ரல் 20, 2026 சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை கூட்டம்

இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஐ, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட மொத்தம் 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ள உள்ளனர்.

  

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதே இந்தப் பார்வையாளர்களின் முதன்மைப் பணி. இன்றைய கூட்டத்தில் கீழ்க்கண்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
  • வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள குடிநீர், நிழற்குடை மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்த ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்படும்.
  • அரசியல் கட்சிகள் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் அல்லது தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை நேரடியாகத் தெரிவிக்கலாம்.
  • தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந் து ஆலோசிக்கப்படும்.
  • தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • தொடர்ந்து பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்து தருவது குறித்து ஆலோசனை மேற்க்கொண்டப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

தமிழகத்தில் நாளை ஏப்ரல் 21 ஆம் தேதி மாலையுடன் தேர்தல் பரப்புரை முடிவுக்கு வருகிறது.இதனால் இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் மற்றும் வேட்பாளர்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். அவர் இன்றும், நாளையும் பல்வேறு கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.

தேசிய கட்சித் தலைவர்கள் தமிழகம் வருகை

இதேபோல் அதே போல் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுக்காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரித்து பிரச்சாரம் மேற்க்கொண்டனர். அந்த வரிசையில் இன்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னையில் ரோடுஷோ நடத்த உள்ளார். தொடர்ந்து கூட்டணித் தலைவர்களும் இன்று இறுதி கட்டப் பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளனர்.

Spread the love