சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் விஜய். அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தொடர்பாக தனித்தீர்மானம் செய்யப்பட்டது. தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல அது நமது உயிர், உணர்வு என்று அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் 2026-2027ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 6ம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 7ம் தேதி நிதி நிலை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு கட்சி வாரியாக எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர்.
அதற்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். தொடர்ந்து நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்களுக்கு சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய சூழலில், இன்று சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் விதமாக இந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் பேசுவார்கள். இதையடுத்து சட்டமன்றத்தில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் எனத்தெரிகிறது.
தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல அது நமது உயிர், உணர்வு. தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று பாடியவர் மனோன்மணியம் சுந்தரனார். தமிழ்னா கெத்து, தமிழ்னா பவர் என்று முதல்வர் கூறியுள்ளார். தமிழ் என்று கூறினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் முதல் இடத்தில்தான் இருக்க வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பது தான் மாநில உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது?; தமிழ் என்றால் விருந்தோம்பல். தமிழின் பெருமையை சொல்ல திருக்குறள் ஒன்று போதாதா?. ஒட்டுமொத்த தமிழரின் பெருமை பேசும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடத்தில்தான் இருக்க வேண்டும். ஒரு பெயரே, ஒரு சொல்லே வரலாறு என்றால் அது தமிழ்தான். தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது தொடர்பாக 2 முறை ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினேன்

More Stories
“மேகமலை விவகாரத்தில் அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” – வைகோ
“தவெகவின் ஐந்து ஆண்டுகள் விவசாயிகளின் பொற்காலமாக இருக்கும்” – ஆதவ் அர்ஜுனா
வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இல்லை; ஏமாற்றம்தான் அதிகமாக உள்ளது: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்