May 28, 2026

தவெகவுக்குப் படையெடுக்கும் அதிமுகவினர்.. பட்டியலில் இணைந்த Ex அமைச்சர்!

அதிமுக உள்கட்சிப் பிளவுக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியடைந்தது. குறிப்பாக, எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெறவில்லை. தோல்வி காரணமாக அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவிய நிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் என ஒரு குழுவாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு குழுவாகவும் இயங்கியது. இதற்கிடையே இருதரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். இதற்கிடையே, எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி, தவெகவில் போய் இணைந்தனர்.

வெல்லமண்டி நடராஜன்

இதனால், தவெகவின் ஆளுமைப் பலம் உயர்ந்து வருகிறது. அந்த வரிசையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான வெல்லமண்டி நடராஜன் இன்று தவெகவில் இணைந்துள்ளார். அவரது மகன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஒ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தவர் வெல்லமண்டி நடராஜன். அவர் திமுகவில் இணைந்தவுடன் எடபபடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

Spread the love