ஒட்டன்சத்திரம் மார்ச்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தாய் நாடு முன்னேற்றக் கழக சார்பில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் என்.மருதுபாண்டி தலைமையில் எம். சிவா வேடசந்தூர் ஒன்றிய கழக செயலாளர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நிறுவனத்தலைவர் தேவேந்திர குல சக்கரவர்த்தி ரவிக்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் தியாகி இமானுவேல் சேகர் ஐயா அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து அவருக்கு மணிமண்டபம் அமைத்துக்கொடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் தமிழகத்தில் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக வருகிற சட்டமன்றத் தேர்தலில் தாய்நாடு முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் அ.பாலாஜி பி.ஏ.,மாநில துணை செயலாளர் ஆர்.கண்ணுச்சாமி பி.ஏ.,எம்.வீரமலை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இக்கூட்டத்தில் முடிவில் வேடசந்தூர் நகர செயலாளர் இப்ராஹிம் நன்றி கூறினார்.
தாய்நாடு முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு