July 30, 2026

திண்டுக்கல் ஸ்ரீநிதி மஹாலில் சோலார் விழிப்புணர்வு பயிற்சி

ஒட்டன்சத்திரம், ஜீலை-30

சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட்  சிவிக் ஆக்சன் குரூப் சார்பாக திண்டுக்கல் ஸ்ரீநிதி மஹாலில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேசன் தலைவர் எஸ். எஸ். சுரேஷ் குமார் சோலாரின் முக்கியத்துவம் குறித்தும் எவ்வாறு எலெக்ட்ரிசியன்கள் சோலார் பேனல்களை நிறுவுவது சம்பந்தமாக விளக்க உரையாற்றினார். 

சி.ஏ.ஜி யின் ஆராய்ச்சியாளர் மணிகண்டன் எலக்ட்ரீசியன் எவ்வாறு வருங்காலத்தில் சோலார் பேனல்கள் அமைப்பது அதன் மூலம் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்குவது சம்பந்தமாக எடுத்துக் கூறினார். தமிழ்நாடு சோலார் எனர்ஜி டெவெலப்மென்ட் அசோசியேசன் துணைத் தலைவர் எஸ். ஜெயபாலன் கலந்து கொண்டு சூரிய மின்தகடுகள் வீட்டுகளுக்கு எவ்வாறு அமைப்பது அதனுடைய செயல்முறைகள் சம்பந்தமாக விளக்கி கூறினார்  .அசோசியேசன் செயலாளர் எம். வி. பாலசுப்ரமணியன் நன்றி கூறினார் இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் பகுதி சேர்ந்த எலக்ட்ரிஷன்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Spread the love