திருப்பூர் வ.உ.சி. நகர், வளையங்காடு பகுதியில் லோட்டஸ் நண்பர்கள் சார்பில் நடைபெற்ற 11-ஆம் ஆண்டு நவராத்திரி விழாவில், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி கலந்து கொண்டார்.
விழாவின் நிறைவு நாளில் அம்மன் சிவசக்தி ஜக்யாவாசுகி அலங்காரம் அலங்காரத்தில் 108 முளைப்பாரிகளுடன் துர்க்கை அம்மன் வீதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன்
நவராத்திரி விழா தீமைகளை அழித்து நன்மைகள் வெற்றி பெறுவதைக் குறிக்கும் விழா என்றும், அன்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும் தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்தியா கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த திருமாறன் ஜி, தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக அதிகாலையில் கைது செய்திருப்பது ஜனநாயகத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரானது எனக் குற்றம்சாட்டினார்.த. வெ. க. ஆட்சியில் மின்சாரக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், முன்பு 7 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் செலுத்திய தாம், தற்போது 18 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளதாகக் கூறினார்.
மேலும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் கொங்கு மண்டல நிர்வாகி காசிராஜன். உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்..

More Stories
திருப்பூர் நஞ்சராயன் நகரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் –பொதுமக்கள் வேதனை!
தி லிட்டில் ஃப்ளவர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் மற்றும் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தி லிட்டில் பிளவர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவ, மாணவிகள் சிறப்பு சேர்க்கையில் வித்யாரம்பம் நடத்தப்பட்டது.
கீழக்கரை நகராட்சியில் நான்கு வகைக் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும் – நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி வேண்டுகோள்!