October 27, 2026

தேனி மாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள்
செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக
உள்ள
உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த பிற்படுத்தப்பட்டோர்
(இஸ்லாமியர்) நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பணிக்கு 100% பார்வைத்திறனற்றவராகவும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நாற்காலி வயர்
பின்னுதலில் ஒரு வருடகால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த பதிவட்டை,
பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்) என்பதற்கான சான்று,
மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID
Card), ஆதார் அட்டை, குடும்ப உணவு வழங்கல் அட்டை,
புகைப்படம் 2 ஆகிய சான்றுகளுடன் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர்
பணியிடத்திற்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 13.11.2026 அன்று மாலை
5.00 மணிக்குள் விண்ணப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.வ.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Spread the love