விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சட்டமன்ற தேர்தல் முடிந்ததை தொடர்ந்து புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ். பாலாஜி ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு புதிய பொறுப்பினை வழங்கியுள்ளார் திருமாவளவன்.
சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அனைவரும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கின்றனர். கடந்த 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வரும் மே 4 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையில் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குப்பதிவு, முடிவு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
எட்டு இடங்களில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் நிலையில், அவர்களுக்கு எட்டு சீட்டுகள் ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரான திருமாவளவன் அறிவித்தார். இந்த பட்டியலில் சிட்டிங் எம்எல்ஏக்களான ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ். பாலாஜி மற்றும் பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
விசிக தலைவர் திருமாவளவன் புதிய அறிவிப்பு
இது மிகப்பெரிய அளவில் அரசியல் களத்தில் விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் எஸ்.எஸ். பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகிய இருவருக்கும் கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விசிகவின் துணை பொதுச்செயலாளரான ஆளூர் ஷாநவாஸ், அக்கட்சியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு எஸ்.எஸ். பாலாஜி பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மீண்டும் போட்டியிட புதிய பொறுப்பு
விசிக கட்சியின் தலைவரான திருமாவளவன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ். பாலாஜிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததது, அக்கட்சியில் உள்ளவர்கள் மத்தியிலே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருமாவளவன் அவர்களுக்கு புதிய பொறுப்பினை வழங்கியுள்ளார்.
சென்னையில் போட்டியிட விருப்பம்
முன்னதாக விசிகவின் துணை பொதுச்செயலாளராக இருக்கும் ஆளூர் ஷாநவாஸ் ஊடக விவாதங்கள் உள்ளிட்டவற்றில் கருத்தியலாக பேசக்கூடியவர். இதனால் கட்சி தாண்டி பலர் மத்தியிலும் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. இதனிடையில் ஆளூர் ஷாநவாஸுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததற்கு பலரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அதே நேரம் ஆளூர் ஷாநவாஸ் சென்னையில் ஒரு தொகுதி வேண்டுமென திமுகவிடம் நேரடியாக பேசினார்.
திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பு.. அதன் விளைவே.. அன்புமணி கருத்து
ஆளூர் ஷாநவாஸ் மற்றும் எஸ்.எஸ்.பாலாஜிக்கு கட்சியில் புதிய பொறுப்பு
கட்சியின் தலைவரான திருமாவளவனிடம் சென்னையில் போட்டியிட வேண்டுமென தெரிவிக்காமல், திமுகவிடம் நேரடியாக பேசியுள்ளார் என விசிகவினர் சிலர் குற்றம்சாட்டினார்கள். இதுப்பற்றி திருமாவளவனும் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆளூர் ஷாநவாஸ் விசிக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில் தேர்தல் முடிந்ததும் கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்தும் விதமாக ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜிக்கு கட்சியில் புதிய பொறுப்பு வழங்கியுள்ளார் திருமாவளவன்.
தவெக தலைவர் விஜய் மீது கடும் விமர்சனம்
முன்னதாக விசிக தலைவர் திருமாளவன் எம்பி தனது தேர்தல் பரப்புரைகளில் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவருடைய ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டும் தான். திமுக வெறுப்பை மட்டுமே அரசியலாக செய்து கொண்டிருக்கிறார். அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஆதரவாக அவர் செயல்படுவதாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More Stories
முதலைமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு எவ்வளவு.. எங்கு அதிகம்?
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்திடம் தவெக கோரிக்கை
சென்னை நீலாங்கரையில் வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்