August 8, 2026

தொழிற்பயிற்சி பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலை: தமிழக அரசு, எஹிமே-நிசான் நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை: தொழிற்பயிற்சி பெற்ற பட்​ட​தா​ரி​களுக்கு ஜப்​பானில் வேலை​வாய்ப்பு வழங்​கும் புரிந்​துனர்வு ஒப்​பந்​தம் அமைச்​சர் ஜா.​முகமது பர்​வேஸ் முன்​னிலை​யில் கையெழுத்​தானது.

தமிழகத்​தில் தற்​போது 132 அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும், 277 தனி​யார் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் செயல்​பட்டு வரு​கின்​றன.

அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் பாரம்​பரிய தொழிற்​பிரிவு​களான பிட்​டர், எலக்ட்​ரீசி​யன், ஏசி மெக்​கானிக், வெல்​டர், கணினி உள்​ளிட்ட தொழிற்​பிரிவு​களி​லும் தொழில் 4.0 தரத்​திலான அட்​வான்​ஸ்டு சி.என்​.சி, ரோபோடிக்​ஸ், எலக்ட்​ரிக் வாக​னங்​கள் போன்ற நவீன தொழிற்​பிரிவு​களி​லும் பயிற்சி வழங்​கப்​படு​கின்​றன.

கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்​களில் 95 சதவீதம் பேர் உள்​நாட்டு முன்​னணி நிறு​வனங்​களில் பணி​யமர்த்​தப்​பட்​டனர். சர்​வ​தேச அளவில் இளைஞர்​கள் வேலை​வாய்ப்பு பெற வழி​வகை செய்ய முதற்​கட்​ட​மாக, அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் ஆட்​டோமொபைல் துறைக்​கான தொழிற்​பிரிவு​களில் பயிற்சி பெற்ற மாணவர்​களுக்கு சிறப்பு தொழில்​நுட்ப பயிற்சி அளிக்​கப்​பட்​டது.

அவர்​கள் ஆட்​டோமொபைல் சர்​வீஸ் டெக்​னீசி​யன்​களாக ஜப்​பான் நாட்​டில் உள்ள எஹிமே-நி​சான் நிறு​வனத்​தில் பணி​யாற்ற, வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை, தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகம் மற்​றும் எஹிமே–நி​சான் நிறு​வனம் இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் தலைமை செயல​கத்​தில் நேற்று தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் ஜா. முகமது பர்​வேஸ் முன்​னிலை​யில் கையெழுத்​திடப்​பட்​டது.

இதன்​படி, பயிற்சி பெறும் தொழிற்​ப​யிற்சி பட்​ட​தா​ரி​களுக்கு ஆறு மாத கால ஜப்​பானிய மொழிப் பயிற்​சி, தொழில்​நுட்​பப் பயிற்சி மற்​றும் போக்​கு​வரத்து செல​வு​கள் ஆகியவை எஹிமே-நி​சான் நிறு​வனத்​தால் வழங்​கப்​படு​கிறது.

ஜப்​பான் சென்​றபின் மொழிப் பயிற்சி செல​வு​கள், விசா கட்​ட​ணங்​கள் ஆகியவை அனைத்​தும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தால் ஏற்​றுக் கொள்​ளப்​படும்.

Spread the love