தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள், நிலைக்குழுவினர் ஆகியோர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, மத்திய ஆயத காவல் படையைச் சேர்ந்த (சிஆர்பிஎப்) 75 வீரர்கள் நாமக்கல் வந்தனர்.
அவர்களை மாவட்ட ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணியம் வரவேற்றார். தொடர்ந்து அவர்கள் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி ஹாஸ்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக சிஆர்பிஎப் மற்றும் துணை ராணுவப்படையினர் நாமக்கல்லுக்கு வருகை தர உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
சேலம் கருப்பூர் ஆலையில் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி, விநியோகம் நிறுத்தம்
மாவட்டத் தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்