சென்னை: தவெக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் விழுப்புரத்தில் ஜூன் 19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தேர்தல் அறிக்கையில் கூறியபடி, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றவும், தமிழகத்தில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யவும் தவெக அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் ஜூன் 19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதன்படி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இரா.பசுபதி தலைமை தாங்குகிறார்.

More Stories
“தமிழக வேளாண் பட்ஜெட் திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்” – மு.க.ஸ்டாலின்
அஞ்சலையம்மாள், நம்மாழ்வார் பெயர்களில் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுடன் விருது
காட்டுப்பன்றிகள் சேதத் தடுப்பு திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு