பழனி ஜூலை 16
பழனி கோட்டைமேட்டு தெருவில், விசுவாசம் அறக்கட்டளை சார்பில் பழனி மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும், பழனி 25 வது வார்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு விழாவும், சத்திரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் செந்தில் கணேசனுக்கு பாராட்டு விழாவும், மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழாவும், முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு 25 வது வார்டு கவுன்சிலர் ஜன்னத்துல் பிர்தௌஸ் தலைமை வகித்தார். விசுவாசம் அறக்கட்டளை தலைவர் எம்இகே ராஜாமுகமது முன்னிலை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் ஜியாவு வரவேற்றார். இதில் அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், காணியாளர் பண்ணாடி ராஜா, ராஜாக்கனி நாடார், டாக்டர் பிரவீன் குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

More Stories
புளியமரத்துக் கோட்டை ஊராட்சியில் புதிய தமிழக வெற்றிக்கழகம் அலுவலகம் திறப்பு விழா
தவெக எம்.எல்.ஏ பேர ஊழல்: மதுரையைச் சேர்ந்த கணேசன் கைது! இதுவரை கைதானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
பழனியில் காமராஜரின் பிறந்த நாள் விழா