தனியாருக்கு பதிவு செய்த, பத்திரப்பதிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்து தமிழர் கட்சி கோரிக்கை
பழனி ஜூலை 13
பழனியில் இந்து தமிழர் கட்சித் தலைவர் ராமரவிக்குமார் நிருபர்களுக்கு கூறியதாவது:
பழனி தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை ஹைகோர்ட் வரை சென்று பழனி முருகன் கோயில் தேவஸ்தானம் கையகப்படுத்தியது. ஆனால் தற்பொழுது அந்த நிலம் தனியாருக்கு கிரையம் செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பாக அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனக் கூறியும், அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மோசடியாக பதிவு செய்த அந்த பத்திரப்பதிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கரூரிலும் கோவிலுக்கு சொந்தமான சுமார் 3000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்கிருப்பதாக கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
திண்டுக்கல் மாவட்டம்
04-09-2026
லட்சிய கணைய கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக தயா சாந்தி தேர்வு,,