திருத்தேரோட்டம் நடைபெற்றது
பக்தர்கள் குவிந்தனர்
பழனி பிப்ரவரி 26
பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி, நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. பழனியில் புகழ் பெற்றது மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவில் பழனி முருகன் கோவிலின் உப கோவில் ஆகும். கோவிலில் மாசி திருவிழா கடந்த 6ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு தொடங்கியது. இத்திருவிழாவையொட்டி, வட்டார அளவில் ஏராளமான பக்தர்கள் தினமும் மாரியம்மன் கோவிலில், மாரியம்மனை தரிசித்து சென்றனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில், மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வீற்றிருக்க, திருத்தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் பொழுது, ஓம் சக்தி, பராசக்தி, என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி நான்கு ரத வீதிகளிலும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். இதில் கோவில் உதவி ஆணையர்கள் லட்சுமி, செந்தில் குமார், முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், காணியாளர் நரேந்திரன், பண்ணடி ராஜா, பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, அரிமா சுந்தரம், சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், நகர் மன்ற கவுன்சிலர்கள் கே சுரேஷ், மகேஸ்வரி சக்திவேல், இந்திரா திருநாவுக்கரசு, காளீஸ்வரி பாஸ்கரன், பத்மினி முருகானந்தம், பிரவீன், இந்து வியாபாரிகள் சங்க ஜெகன், சோலை தேவர், முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்