26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
பழனி மார்ச் 16
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழா வரும் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனியில் புகழ்பெற்றது பங்குனி உத்திரம் திருவிழாவாகும். இந்த திருவிழாவின் முக்கிய அம்சமே, பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றின் நீரை சிறு சிறு குடங்களில் சேகரித்து தீர்த்தக்காவடியாக எடுத்து வருவார்கள். பின்பு மேளதாளங்கள் முழங்க பழனி வரும் அவர்கள் தீர்த்தக்காவடி நீரை பழனி முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வார்கள். பழனி பங்குனி உத்திரம் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். திருவிழா பழனி திருஆவிணன்குடி முருகன் கோயிலில் வரும் மார்ச் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் மார்ச் 31 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்து வருகிறார்.

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி