ஜெய்ப்பூர்: இந்தியாவின் பொக்ரான்-II அணு சோதனையில் தொடர்புடைய விஞ்ஞானி லால் பகதூர், பாதரசத்தைத் தங்கமாக மாற்றியுள்ளதாக உரிமை கோரியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கனோடியா கல்லூரி இயற்பியல் ஆய்வகத்தில், பொக்ரான்-II அணு சோதனையில் தொடர்புடைய விஞ்ஞானி லால் பகதூர் தலைமையிலான குழு 0.240 கிராம் பாதரசத்தைக் கொண்டு ஆய்வு நடத்தியது. பரிசோதனை செய்யப்பட்ட மாதிரியின் மேற்பரப்பில் 99.04% தங்கம் (23.77 கேரட் தூய்மை), 0.48% வெள்ளி மற்றும் 0.48% செம்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆச்சார்யா நாகார்ஜுனாவின் பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ரச சாஸ்திரம்’ (பண்டைய ரசவாத முறை), ‘தாது பரிவர்த்தனை’ (உலோக உருமாற்றக் கலை) மற்றும் ‘பாரத சம்ஸ்காரம்’ (பாதரச சுத்திகரிப்பு முறை) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல ஆண்டுகள் ஆய்வு செய்து இதைச் சாதித்துள்ளதாக பிட்ஸ் பிலானி பட்டதாரியான விஞ்ஞானி லால் பகதூர் கூறியுள்ளார். சோதனைக்குப் பிறகே இது எந்தளவுக்கு உண்மை என்பது முழுமையாகத் தெரியும்.

More Stories
புற்றுநோய் மருந்துகள் விலை 93% வரை குறைந்தது – உச்ச நீதிமன்றம் கண்டனம் தாக்கம்
டெல்லி ராம் லீலா போராட்டம் குறித்து 20 மார்க்கெட், 20 பிரதிநிதிகள், 20 நிமிடம் ராகுல் காந்தி பேச்சு நடத்த வலியுறுத்தல்
மருத்துவ மாணவர்களுக்கு கட்டாய கிராமப்புறப் பணி – நெறிமுறைகளை உருவாக்க உச்ச நீதிமன்றம் முடிவு