July 22, 2026

பிரிட்டனின் புதிய பிரதமராக பர்ன்ஹாம் பதவியேற்பு

லண்டன்: பிரிட்​டனின் 59-வது பிரதம​ராக ஆன்டி பர்ன்ஹாம் நேற்று பதவி​யேற்​றார். இவர் கடந்த 10 ஆண்​டு​களில் பொறுப்பேற்கும் 7-வது பிரதமர் ஆவார்.

பிரிட்​டனில் கடந்த 2024-ல் நடை​பெற்ற நாடாளு​மன்​றத் தேர்​தலில் தொழிலா​ளர் கட்சி வெற்றி பெற்​றதை தொடர்ந்து அதன் தலைவரான கெய்ர் ஸ்டார்​மர் பிரதம​ராக பதவி​யேற்​றார். 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பதவி​யேற்ற ஸ்டார்​மர் கடந்த 2 ஆண்டுகளாக பிரதம​ராக பதவி வகித்து வந்​தார். இந்​நிலை​யில் உள்​ளாட்சி தேர்​தலில் தொழிலா​ளர் கட்​சிக்கு ஏற்​பட்ட தோல்வி உள்​ளிட்ட காரணங்​களுக்​காக பிரதமர் பதவி​யில் இருந்து விலகுவதாக ஸ்டார்​மர் கடந்த ஜூன் 22-ம் தேதி அறி​வித்​தார்.

இதையடுத்து நடை​பெற்ற தொழிலா​ளர் கட்​சி​யின் கூட்​டத்​தில் கட்சி​யின் புதிய தலை​வ​ராக​வும் பிரதம​ராக​வும் 56 வயதான ஆன்டி பர்ன்​ஹாம் போட்​டி​யின்றி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். கெய்ர் ஸ்டார்​மர் மன்​னர் சார்​லஸை சந்​தித்து தனது ராஜி​னாமா கடிதத்தை சமர்ப்​பித்​தார். இதையடுத்து புதிய அரசை அமைக்குமாறு மன்​னர் சார்​லஸ் விடுத்த அழைப்பை பர்ன்​ஹாம் முறைப்​படி ஏற்​றுக்​கொண்​டார். இந்​நிலை​யில் பிரிட்​டனின் 59-வது பிரதம​ராக ஆன்டி பர்ன்​ஹாம் நேற்று பதவி​யேற்​றுக் கொண்​டார்.

வடக்​கின் ராஜா என்ற செல்​ல​மாக அழைக்​கப்​படும் பர்ன்​ஹாம் ஏற்​கெனவே கிரேட்​டர் மான்​செஸ்​டரின் மேய​ராக பணியாற்றியுள்​ளார். பிரதம​ராக பர்ன்​ஹாம் பதவி​யேற்ற பிறகு அவர் தனது முதல் உரை​யில் பிரிட்​ட​னுக்கு ஒரு புதிய பாதையைவகுக்க இருப்​ப​தாக​வும் வாழ்க்​கைச் செல​வு​களை எளிதாக்​கு​வ​தி​லும் பிராந்​திய ஏற்​றத்​தாழ்​வு​களை குறைப்​ப​தி​லும் கவனம் செலுத்​தவுள்​ள​தாக கூறி​னார்

Spread the love