November 5, 2026

புகழூர் நகர்மன்ற தலைவர்  தலைமையில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

கரூர் நவ5

புகழூர் நகராட்சி  கூட்டத்தில்  நடைபெற்ற  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலபதி மற்றும் நகராட்சி மேலாளர் நைனா முகமது ஆகியோரை கண்டித்து நகர்மன்ற தலைவர் தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி மேலாளர் ஆகியோரின் வற்புறுத்தலின் பேரில், இவர்களுடைய உயர் அதிகாரியின் (RDMA-சேலம் மண்டலம்)வீட்டிற்கு நகராட்சி அலுவலர்களை மளிகை பொருட்கள் வாங்கி செல்லவும் மற்றும் அவரது வீட்டின் தூய்மை பணிகளை மேற்கொள்ள நகராட்சி பணியாளர்களை அனுப்பி வைக்கப்பட்டதை கண்டித்தும்,

பொதுமக்களின் கோரிக்கைகள் எதற்கும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், புதிய சொத்து வரி, வரி பெயர் மாற்றம் மற்றும் புதிய குடிநீர் இணைப்பு போன்ற அத்தியாவசிய தேவை குறித்த மனுக்களை கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்தும்,

நகர்மன்ற தலைவர் திரு.சேகர்(எ) A.குணசேகரன்அவர்கள் மற்றும் நகர்மன்ற துணை தலைவர் திரு. P.S.பிரதாபன் அவர்கள் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கருர் ஆர்டிஒ முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில்  ஆணையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் மீது  ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. நகராட்சி தலைவர் ஒருவர் போராட்டத்தில் பங்கு கொண்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love