March 11, 2026

புரோ கோட் பெயரை மாற்றும் ரவி மோகன்!

புரோ கோட் திரைப்படத்தின் பெயர் குறித்து…

நடிகர்கள் ரவி மோகன், எஸ்ஜே சூர்யா, அர்ஜுன் அசோகன்

புரோ கோட் திரைப்படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.

நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் புரோ கோட் (Bro code). இதில், ரவி மோகனுடன் எஸ். ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் திருமணமான ஆண்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பேசுவதாக எடுக்கப்பட்டு வருகிறது.

இதன், அறிமுக புரோமோ விடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பிரபல மதுமான நிறுவனமான புரோ கோட் தில்லி உயர்நீதிமன்றத்தில் ரவி மோகனின் புரோ கோட் படத்தின் பெயருக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளனர்.

காரணம், புரோ கோட் நிறுவனம் தமிழகத்தில் புதிய மதுபான வகைகளை அறிமுகம் செய்ய ரவி மோகனின் படத்தை புரமோஷனாக பயன்படுத்த அணுகியதாகவும் அவர் மறுத்ததால் இந்நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.Advertise with us

இந்த நிலையில், டீசரில் புரோ கோட் திரைப்படத்தின் பெயரை நீக்கியுள்ளனர். இதனால், இப்படம் இனி புரோ கோட் பெயரில் இருக்காது என்றும் புதிய பெயர் விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

Spread the love