மதுரை கோட்டத்தில் மின்சார ரயில் என்ஜின்களை இயக்க சிறப்பு ஏற்பாடுகள் மதுரை கோட்டத்தில் ரயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து ரயில்களும் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. மின்சார ரயில்களை தங்கு தடையின்றி இயக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ரயில் பாதை மின் கம்பி வடங்களை பராமரிக்க மற்றும் திடீர் பழுதுகளை சரி செய்ய ரயில் பாதையில் இயங்கும் வகையிலான 18 சிறப்பு ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. திடீர் பழுதுகளை சரி செய்யும் வகையில் இவற்றை மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, பழனி, காரைக்குடி, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் தனி ரயில் பாதை அமைத்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) அன்று நாசரேத் ரயில் நிலையத்தில் தனி ரயில் பாதையுடன் மின்சார பராமரிப்பு ரயில் பெட்டி சேவை துவக்கி வைக்கப்பட்டது. மேலும் மானாமதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, புனலூர் ஆகிய ரயில் நிலையம் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பராமரிப்பு பெட்டியில் சிறிய பணிமனை போன்ற அமைப்புடன் ஜெனரேட்டர், மின்கம்பி வடம் அருகே சென்று பழுது பார்க்க தானாக உயரும் லிப்ட் அமைப்புடன் கூடிய சதுரப் பெட்டி உட்பட தேவையான கருவிகள் அனைத்தும் உள்ளன. ரயில் பாதைக்கு அருகே இரண்டு மீட்டர் தூரத்தில் வளர்ந்துள்ள மரங்களால் ரயில் மின்சார கம்பிவடங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோல ரயில் பாதை அருகே உள்ள மரங்கள் பற்றிய தகவல்களை அருகிலுள்ள ரயில் நிலைய அதிகாரி அல்லது ரயில்வே கேட் பாதுகாவலரிடம் தெரிவிக்கலாம்.
மதுரை கோட்டத்தில் மின்சார ரயில் என்ஜின்களை இயக்க சிறப்பு ஏற்பாடுகள்

More Stories
மாவட்ட தோதல் அலுவலா்-மாவட்ட ஆட்சியா் அவா்கள் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட புகைப்படம்
கொள்ளிடம் பேருந்து நிறுத்தத்தின் அவல நிலை: அடிப்படை வசதிகள் வேண்டி பயணிகள் அவசரக் கோரிக்கை!
திருச்சி அருகே தவெக தேர்தல் பணிமனைக்கு தீவைப்பு