சென்னை: மதுரை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் உட்பட தமிழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் டி. பிரபுஷங்கர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக நியமனம். சென்னை மாநகர சுகாதாரத்துறை இணை ஆணையர் ஜெயசீலன், சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம். மேலும், இவர், தமிழக சுற்றுலாத்துறை வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராகவும் செயல்படுவார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமனம். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம்.
ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையர் பொன்மணி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமனம். இன்னசன்ட் திவ்யா, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக நியமனம். கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநரான கவிதா ராமு, டுபிட்கோ நிர்வாக இயக்குநராக நியமனம்.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரான டி. மோகன், பெருநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக நியமனம். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநரான ஷ்ரேயா பி சிங், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை இணை ஆணையராக நியமனம். தமிழ்நாடு பைபர்நெட் கார்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ரமண சரஸ்வதி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்ற ராஜாசெல்வம்
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் புதுப்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகம் அலுவலகம் திறப்பு விழா
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் புதுப்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகம் அலுவலகம் திறப்பு விழா