September 18, 2026

மருத்துவரின் குறிப்பு இல்லாமல் விற்பதை கண்காணிக்க நாடு முழுவதும் மருந்து கடைகளில் சிசிடிவி கேமரா கட்​டா​யம்

புதுடெல்லி: நாடு முழு​வதும் முறை​யான மருந்து சீட்​டு​கள் இல்லாமல் அட்​ட​வணை எச், எச்1 மற்​றும் எக்ஸ் மருந்​துகள் விற்பனை செய்​யப்​படு​வதை தடுக்க மருந்​துக் கடைகளில் சிசிடிவி கண்​காணிப்பை கட்​டாய​மாக்க மத்​திய சுகா​தார அமைச்​சகம் பரிந்​துரை செய்​துள்​ளது.

ஒரு சில மருந்து கடைகள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலேயே தூக்க மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கின்றன. அவை போதைக்காவும், தற்கொலைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்கப்படுவதை தடுக்க மருந்துக் கடைகளில் சிசிடிவி கண்காணிப்பை கட்டாயமாக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்​பாக மத்​திய சுகா​தார அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மருந்​துக் கடைகளில் அட்டவணை எச், எச்1 மற்​றும் எக்ஸ் மருந்​துகளின் விற்​பனை மற்றும் விநி​யோகத்​தைக் கண்​காணிப்​பதை வலுப்​படுத்​து​வதற்கான ஒரு கூடு​தல் ஒழுங்​கு​முறை நடவடிக்​கை​யாக, கட்​டாய சிசிடிவி கண்​காணிப்பு பரிந்​துரை செய்​யப்​படு​கிறது. இந்த பரிந்துரை குறித்து சம்​பந்​தப்​பட்ட தரப்​பினர் மற்​றும் பொதுமக்களிட​மிருந்து ஆட்​சேபனை​களை​யும் ஆலோசனைகளை​யும் அமைச்​சகம் கோரி​யுள்​ளது.

கருத்​துகளை​யும் பரிந்​துரைகளை​யும் சுகா​தார மற்​றும் குடும்ப நல அமைச்​சகத் தின் துணைச் செய​லா​ள​ருக்கு (மருந்​துகள்) அனுப்​பலாம் அல்​லது drugsdiv-mohfw@gov.in என்ற மின்​னஞ்​சல் முகவரிக்கு அனுப்​பலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

அட்​ட​வணை எச், எச்1 மற்​றும் எக்ஸ் மருந்​துகள் என்​றால் என்ன?

அட்​ட​வணை எச் மருந்​துகள் என்​பவை, பதிவுசெய்​யப்​பட்ட மருத்து​வரிட​மிருந்து பெறப்​பட்ட செல்​லுபடி​யாகும் மருந்துச்சீட்டின் மூலம் மட்​டுமே விற்​கக்​கூடிய மருந்​துகளாகும். அட்​ட​வணை எச்1 என்​பது அதன் துணைப் பிரி​வாகும், அட்டவணை எக்ஸ் என்​பது, குறிப்​பிட்ட பழக்​கத்தை உண்டாக்கும், மனோ​வியல் மற்​றும் போதைப்​பொருட்​கள் உள்ளிட்ட மருந்துகளை உள்ளடக்கியது.

Spread the love