June 5, 2026

முதல்வர் பேச்சுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள கருணாநிதி நினை​விடத்​தில் தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை நேற்று மரி​யாதை செலுத்​தி​னார்.

பிறகு அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேர்​தலெல்​லாம் முடிந்து ஆட்​சிக்கு வந்​தாச்​சு. இனியும் பிரச்​சார பாணி​யிலேயே முதல்வர் பேசிக் கொண்​டிருக்​காமல், மக்​களின் வாழ்​வா​தா​ரம் மற்​றும் பாது​காப்​பில் கவனம் செலுத்த வேண்​டும்.

காவிரி​யில் மேகே​தாட்டு அணை கட்ட விடா​மல் தடுப்​பது, முல்​லைப் பெரி​யாறு பிரச்​சினை போன்ற மக்​கள் நலன் சார்ந்த அடுத்​தகட்ட நடவடிக்​கை​களில் அரசு கவனம் செலுத்த வேண்​டும் என்​பதே காங்​கிரஸின் விருப்​பம்.

தமிழகத்​தில் மாநிலங்​களவை தேர்​தல் இடப் பங்​கீடு மற்​றும் இடங்​களைக் கோரு​வது குறித்து அகில இந்​திய காங்​கிரஸ் தலை​மை​தான் முடி​வெடுக்​கும்.

பிர​வீன் சக்​கர​வர்த்​திக்கு மாநிலங்​களவை இடம் பரிந்​துரைக்​கப்​படு​வது குறித்து இதுவரை என்னிடம் பேசவில்லை. தலைமை கேட்டால் கருத்து கூறுவேன் என்றார்.

Spread the love