September 23, 2026

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா.தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா.தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்.                               ஆண்டிபட்டி ஜூன் 3, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடினார்கள். ஆண்டிபட்டி- தேனி சாலையில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவபடத்திற்கு, எம்.எல்.ஏ.மகாராசன் மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.டி.சுப்புலாபுரம் கிராமத்தில் கிளை செயலாளர் தங்க விநாயகம் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு  அன்னதானமாக பிரியாணியை எம்.எல்.ஏ.மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் ஆகியோர் வழங்கினார்கள்.பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் சரவணன்.எஸ்.டி.சிவா, அர்ச்சுணன், மலைச்சாமி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Spread the love