புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் நாள் துவக்க விழா
ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்பு.
ஒட்டன்சத்திரம் ஜன.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் நாள் துவக்க விழாவை ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கிவைத்து விழா பேருரையாற்றினார்.
இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ச.ரா.ஜெயப்பிரதா வரவேற்று பேசினார். இவ்விழாவில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கல்லூரி வளாகத்தில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு புதிய கல்லூரியின் முதல் நாள் துவக்க விழாவை சிறப்பாக தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் திண்டுக்கல் மேற்கு வட்டம் வட்டாட்சியர் சுல்தான் சிக்கந்தர், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் மலரவன், ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிதியாளர் இ.ஆர்.பி.சுகன்யா, கிராம நிர்வாக அலுவலர் கௌதம் ராஜ், திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, ஒன்றிய செயலாளர்கள் மணி, இன்பராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஸ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி சண்முகவேல், கொத்தப்புள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி அன்பரசு, துணைத்தலைவர் ரங்கசாமி, ஊராட்சி செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முடிவில் ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிக வியல் துறைத்தலைவர் முனைவர் மு.சரவணன் நன்றி கூறினார்.
One attachment • Scanned by Gmail

More Stories
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் புற நகர் மாவட்ட பொதுச்
நாமக்கல் மாவட்டத்தில்
நீலகிரியில் ரூ.2.59 கோடி பணம், தங்கம் பறிமுதல்.. சுற்றுலா செல்பவர்கள் கவனமுடன் செயல்பட எச்சரிக்கை!