ஹார்முஸ் பகுதியில் கடந்த சில தினங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்தாக்குதலால், மத்தியக் கிழக்கில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போரின் ஒருபகுதியாக, உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டது. இதன்காரணமாக, உலகளவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையிலான போருக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்னணு முறையில் ஜூன் 17 அன்று கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய 60 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தனைத் தொடர்ந்து முதற்கட்டமாக சுவிட்சர்லாந்தில் ஜூன் 21 அன்று பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
ட்ரம்ப் – பெசெஷ்கியன்எக்ஸ் தளம்
இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் மெதுவாகத் தொடங்க ஆரம்பித்திருந்தது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் குறையத் தொடங்கிய நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று, ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற ஒரு வர்த்தகக் கப்பலை ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருந்தது. ஐநா அமைப்பின் அதிகாரப்பூர்வ மீட்புப் பாதையைப் பயன்படுத்தாமல் ஓமன் நாட்டு எல்லைக்கு மிக அருகில் பயணித்ததே ஈரானின் இந்த தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
உலகளவில் செஷெல்ஸ் முக்கியத்துவம் பெறுவது ஏன்?
இந்தநிலையில் தான், ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஜூன் 26-ம் தேதி இரவு ஈரானின் ஏவுகணை, ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலோர ரேடார் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடந்தியிருந்தது. இதைத் தொடர்ந்து, ஈரானின் ஆபத்தான நடத்தைக்கு ஒரு சக்திவாய்ந்த பதிலடி கொடுத்துள்ளோம் என அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்திருந்தது. மேலும், வன்முறைக்கு வன்முறையால் பதிலளிக்கப்படும் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ் எச்சரித்திருந்தார்.
பஹ்ரைன் தாக்குதல்Reuters
அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைன் மீது நேற்று முன் தினம், ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது ஈரான். தொடர்ந்து, ஹார்முசை அனுமதி இன்றி கடக்கும் கப்பல்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலுக்கும், பஹ்ரைன் மீதான ஈரானின் தாக்குதலுக்கு நேற்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதேபோல, இதேநிலை நீடித்தால் ஈரான் என்ற நாடே இருக்காது என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இவ்வாறு, இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும், மோதல்கள் தொடர்ந்து வருவது வளைகுடாவில் மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் வளைகுடா கோட்டையை உலுக்கிய ஈரான்.. போரின் உண்மை சேதம் அம்பலம்!
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, ஈரான் அமெரிக்கா இடையே நடத்தப்பட்டு வந்த தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நாளை கத்தார் தோஹாவில் நடக்கும் பேச்சுவார்த்தை முற்றிலும் இந்த கடல் வழித்தட வணிகக் கப்பல்களின் போக்குவரத்து பாதுகாப்பு குறித்தே அமையும் எனத் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நிர்ணயிக்கப்பட்ட 60 நாட்கள் பேச்சுவார்த்தைக்காலம் தொடர்ந்து நீடிக்கும் என்பதை இந்த நடவடிக்கை உணர்த்துகிறது.

More Stories
வெனிசுலா: இடிபாடுகளில் இருந்து 96 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தந்தை, மகன்
“அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்” – மார்கோ ரூபியோ தகவல்
‘ஈரான் போர் சூழலிலும் உலகப் பொருளாதாரத்தின் முக்கிய சக்தியாகத் திகழும் இந்தியா’