
உதய்பூரில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த சில தினங்களாக உதய்பூரில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் திருமண வைபவங்கள் நடைபெற்று வந்தன. இதில் இருவரது குடும்பத்தினரும் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று (பிப்.26) காலை 10:10 மணிக்கு இருவரது திருமணமும் நடைபெற்றது.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணத்துக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். மேலும், தொழிலதிபர் அம்பானி தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தின் புகைப்படங்கள் எதுவுமே இதுவரை வெளியாகவில்லை. விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்தைத் தொடர்ந்து பிப்ரவரி 4-ம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் ஒட்டுமொத்த திரையுலகினரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

More Stories
‘ஏழு கடல் ஏழு மலை’யில் புதிய உலகம்
நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’
“சினிமா கொடுத்த மனப்பக்குவம்”- ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி