May 18, 2026

விமானப் படைக்காக குஜராத்தில் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 போக்குவரத்து விமானம் பரிசோதனைக்கு தயார்

வதோதரா: ​வி​மானப்​படை பயன்​பாட்​டுக்​காக குஜ​ராத்​தின் வதோதரா நகரில் உள்ள டாடா – ஏர்​பஸ் மையத்​தில் தயாரிக்கப்பட்ட ஏர்​பஸ் சி-295 போக்​கு​வரத்து விமானம் பரிசோதனைக்கு தயார் நிலை​யில் உள்​ளது.

இந்​திய விமானப்​படை​யில் வீரர்​கள் மற்​றும் சரக்கு போக்​கு வரத்துக்கு பயன்​படுத்​தப்​பட்ட ஆவ்ரோ -748 விமானங்​களுக்கு மாற்​றாக ஏர்​பஸ் நிறு​வனத்​தின் சி-295 ரக விமானத்தை சேர்க்க முடிவு செய்​யப்​பட்​டது. இதில் 70 வீரர்​கள் பயணிக்​கலாம், ராணுவத் தளவாட பொருட்​களை​யும் எடுத்​துச் செல்​லலாம். குறுகிய ஓடு​தளத்​தில் இந்த விமானம் மேலே எழும்​பும். விமானப்​படை பயன்​பாட்​டுக்கு 56 சி-295 ரக விமானங்​களை கொள்​முதல் செய்ய ஸ்பெ​யின் நாட்​டுடன் ரூ,21,935 கோடிக்கு இந்​தியா ஒப்பந்தம் செய்​தது.

இந்த ஒப்​பந்​தத்​தின் கீழ் 16 விமானங்​கள் ஸ்பெ​யினில் இருந்து வாங்​கப்​படும். மீதம் உள்ள 40 விமானங்​கள் மேக் இன் இந்​தியா திட்​டத்​தின் கீழ் டாடா – ஏர்​பஸ் நிறு​வன​மும் இணைந்து குஜராத்தின் வதோதரா நகரில் தயாரிக்​கின்​றன. இந்த மையத்தை பிரதமர் மோடி, ஸ்பெ​யின் பிரதமர் பெட்ரோ சான்​செஸ் ஆகியோர் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கி வைத்​தனர்.

இந்த மையத்​தில் தயா​ரான முதல் சி-295 ரக விமானம் தற்​போது பரிசோதனைக்கு தயா​ராக உள்​ளது. இந்த விமானத்​தின் வடிவ​மைப்​பில் 85 சதவீதத்​துக்​கும் மேல் உள்​நாட்​டில் நடை​பெற்​றது. இந்தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட 13,000-க்​கும் மேற்​பட்ட பாகங்​கள் இதில் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இந்​தி​யா​வின் 37 பொதுத்​துறை மற்​றும் தனி​யார் நிறு​வனங்​கள் விமான தயாரிப்​புக்கு தேவையான பாகங்​களை விநி​யோகித்​துள்​ளன.

இங்கு தயா​ரான முதல் விமானத்தை இந்​திய விமானப்​ படை​யின் துணை தளபதி ஏர் மார்​ஷல் அவதேஷ் குமார் பாரதி சமீபத்​தில் பார்​வை​யிட்​டார். இந்த வி​மானம்​ முதல்​ பறக்​கும்​ சோதனைக்​கு தயா​ராகி வருகிறது.

Spread the love