ஒட்டன்சத்திரம், நவ.:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சி வண்ணக் கருப்பணசுவாமி கோவில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
இதில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் பழனி வருவாய் கோட்டாட்சியர் பிரியங்கா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கோவிந்தராசு,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஹென்றி பீட்டர்,மாவட்ட சுகாதார அலுவலர் (பழனி)மரு.மோ. அனிதா,துணை இயக்குனர் (காசநோய்)
மரு.சந்திரிபிரியா துணை ஆட்சியர் (பயிற்சி) எஸ்.திவ்யலட்சுமி,தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை துணை இயக்குனர் (திண்டுக்கல்) காயத்ரி மாவட்ட சமூக நல அலுவலர் எஸ்.கரோலின் செல்வராணி,
ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் மு.ஸ்வேதா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மு.ஜெகதீஸ்வரன்,ஒட்டன்சத்திரம் வருவாய் ஆய்வாளர் பூர்ணிமா,விருப்பாச்சி கிராம நிர்வாக அலுவலர் ரகுபதி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் லட்சுமி நன்றி கூறினார்.

More Stories
ஒட்டன்சத்திரம் கேதையுறம்பு ஊராட்சியில் 5 ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் தவித்த ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்!
கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டம்