ஆண்டிபட்டி, பிப். 14,
தேனி தி.மு.க தெற்கு மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஆண்டிபட்டி வைகை சாலையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து வரவேற்பு உரையாற்றினார்கள்.
கூட்டத்தில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா சிறப்புரையாற்றினார். மேலும், தேனி தெற்கு மாவட்ட செயலாளரும், கம்பம் எம்.எல்.ஏ.வுமான ராமகிருஷ்ணன், மாநில தீர்மானக் குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆண்டிபட்டி முன்னாள் எம்.எல்.ஏ.ஆசையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர். தி.மு.க இளைஞர் அணியின்ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அர்ச்சுனன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.டி.எஸ்.சிவா உள்பட இளைஞர் அணியினர் மற்றும் சார்பு அணியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
மே4ந்தேதி வாக்கு எண்ணிக்கை – வாக்குபெட்டிகளுக்கு 18ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு
மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து… காய்கறி வெட்டப் பக்தர்களுக்கு அழைப்பு…
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா: வைகை அணை திறப்பு