ராசிபுரம் பெருமாள் கோவிலில் நடந்த பக்தர்களை மாடு தாண்டும் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.அங்கு முக்கிய நிகழ்வாக பக்தர்கள் மீது மாடு தாண்டும் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
கோவிலுக்கு மாடு அழைத்து வரும் வழியில் ஆண் பெண் குழந்தைகள் பக்தர்கள் அனைவரும் தரையில் படுத்துக்கொண்டனர்.
படுத்திருந்த பக்தர்களை மாடு தாண்டி செல்லும்போது அதன் கால் பக்தர்கள் மேல் படாமல் சென்றால் வாக்கு பலிக்கும் என்பதும் கால் பட்டு விட்டாலோ அல்லது தாண்டாமல் நின்று விட்டாலோ பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறாது என்பதும் நம்பிக்கை. கடந்த இருநூறு வருடங்களுக்கு மேல் இந்த நிகழ்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

More Stories
பழனி
ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்து போட்டி
04-10-2026