August 6, 2026

ஈரோடு

Oplus_16908288

ஈரோடு வெண்டிபாளையம் குப்பைகாடு பகுதி யைச் சேர்ந்தவர் பானு (வயது 27). இவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த பரிதா, அவரது மகன் அன்சாரி மற்றும் அவருடன் வந்தவர்கள் அத்து மீறி எனது வீட்டிற்குள் நுழைந்த முன் விரோதம் காரணமாக சமையல் அறையில் இருந்த என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, தரதரவென வெளியே இழுத்து வந்து கடுமையாக தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் மயக்கமடைந்த என்னை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்பு மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 7 நாட்கள் ஆகியும் என்னை தாக்கியவர்கள் மீது எந்த குற்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்த என்னை தொடர்பு கொண்டு வீட்டை காலி செய்யுமாறு காவல்துறையினர் மிரட்டுகிறார்கள். ஆகவே என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குழந்தைகளுடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

Spread the love