June 10, 2026

குரூப் ‘கே’ – போர்ச்சுகல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா அணிகள் எப்படி? | FIFA WC 2026

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘கே’ போர்ச்சுகல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

போர்ச்​சுகல்

பயிற்​சி​யாளர்: ராபர்டோ மார்​டினெஸ்

பிஃபா தரவரிசை: 5

சிறப்​பான செயல் திறன்: 1966-ம் ஆண்டு தொடரில் 3-வது இடம்.

கடைசி உலகக் கோப்​பை: 2022

பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 8

தகுதி பெற்ற விதம்: ஐரோப்​பிய கால்​பந்து கூட்​டமைப்பு தகுதி சுற்​றில் எஃப் பிரி​வில் முதலிடம் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்​றது. அர்​மேனியா அணிக்கு எதி​ரான ஆட்டத்​தில் 9-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை வாய்ப்பை உறுதி செய்​திருந்​தது.

நட்​சத்​திரங்​கள்: கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ, புருனோ பெர்னாண்​டஸ், நுனோ மென்​டிஸ்.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 35 ஆட்​டங்​கள், 17 வெற்றி, 6 டிரா, 12 தோல்​வி, 61 அடித்த கோல்​கள், 41 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 17 vs காங்கோ

ஜூன் 23 vs

உஸ்​பெகிஸ்​தான்

ஜூன் 27 vs கொலம்​பியா

காங்கோ

பயிற்​சி​யாளர்: செபாஸ்​டியன் டெசாப்ரே

பிஃபா தரவரிசை: 45

சிறப்​பான செயல் திறன்: 1974-ம் ஆண்டு தொடரில் லீக் சுற்றுடன் வெளி​யேற்​றம்.

கடைசி உலகக் கோப்​பை: 1974

பங்​கேற்ற உலகக் கோப்​பை: 1

தகுதி பெற்ற விதம்: மெக்​சிகோ​வின் குவாடலஹா​ரா​வில் நடை​பெற்ற பிளே-ஆஃப் போட்​டி​யின் ‘ஏ’ பிரிவு இறுதி ஆட்​டத்​தில், கூடு​தல் நேரத்​தில் ஜமைக்​காவை 1-0 என்ற கோல் கணக்​கில் வீழ்த்தி காங்கோ அணி உலகக் கோப்​பைக்​குத் தகுதி பெற்​றது.

இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க வெற்​றி​யானது, 1974-ம் ஆண்​டுக்​குப் பிறகு காங்கோ அணி முதல் முறை​யாக உலகக் கோப்​பை​யில் பங்​கேற்​பதை உறுதி செய்​தது.

நட்​சத்​திரங்​கள்: சான்​சல் எம்​பெம்​பா, செட்​ரிக் பகாம்​பு, ஜான் விஸ்ஸா

ஒட்​டுமொத்த செயல் திறன்: 3 ஆட்​டங்​கள், 0 வெற்றி, 0 டிரா, 3 தோல்​வி, 0 அடித்த கோல்​கள், 14 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 17 vs போர்ச்​சுகல்

ஜூன் 23 vs கொலம்​பியா

ஜூன் 27 vs உஸ்​பெகிஸ்​தான்

உஸ்​பெகிஸ்​தான்

பயிற்​சி​யாளர்: ஃபேபியோ கன்​ன​வாரோ

பிஃபா தரவரிசை: 50

பங்​கேற்ற உலகக் கோப்​பை: முதன் முறை​யாக பங்​கேற்பு

தகுதி பெற்ற விதம்: உஸ்​பெகிஸ்​தான் அணி உலகக் கோப்​பைக்கு முதல் முறை​யாகத் தகுதி பெற்று வரலாறு படைத்​துள்​ளது. கடுமை​யான ஆசிய கால்​பந்து தகு​திச் சுற்​றில் உஸ்​பெகிஸ்​தான் 10 ஆட்​டங்​களில் 6 வெற்​றிகளை குவித்து 2வது இடம் பிடித்து உலகக் கோப்பை தொடரில் கால்​ப​தித்​தது.

நட்​சத்​திரங்​கள்: அப்​துகோடிர் குசனோவ், ஹுஸ்​னிடின் அலிகுலோவ், எல்​டர் ஷோமுரோடோவ்

ஒட்​டுமொத்த செயல் திறன்: 3 ஆட்​டங்​கள், 0 வெற்றி, 0 டிரா, 3 தோல்​வி, 0 அடித்த கோல்​கள், 14 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 17 vs கொலம்​பியா

ஜூன் 23 vs போர்ச்​சுகல்

ஜூன் 27 vs காங்கோ

கொலம்​பியா

பயிற்​சி​யாளர்: நெஸ்​டர் லாரேன்சோ

பிஃபா தரவரிசை: 13

சிறப்​பான செயல் திறன்: 2014-ம் ஆண்டு கால் இறுதி வரை முன்னேற்​றம்

கடைசி உலகக் கோப்​பை: 2018

பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 6

தகுதி பெற்ற விதம்: கடும் போட்டி நிறைந்த தென் அமெரிக்க தகு​திச் சுற்​றில் மூன்​றாம் இடத்​தைப் பிடித்​ததன் மூலம் கொலம்பியா உலகக் கோப்​பைக்​குத் தகுதி பெற்​றது. 18 போட்டிகள் விளை​யாடிய கொலம்​பியா 28 புள்​ளி​களை பெற்றிருந்தது.

நட்​சத்​திரங்​கள்: லூயிஸ் தி​யாஸ், ஜேம்​ஸ் ரோட்​ரிக்​ஸ், டேவிட் ஓஸ்​பி​னா.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 22 ஆட்​டங்​கள், 9 வெற்றி, 3 டிரா, 10 தோல்​வி, 32 அடித்த கோல்​கள், 30 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன்​ 17 vs உஸ்​பெகிஸ்​தான்

ஜூன்​ 23 vs காங்கோ

ஜூன் 27 vs போர்ச்சுகல்

Spread the love