உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘கே’ போர்ச்சுகல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுகல்
பயிற்சியாளர்: ராபர்டோ மார்டினெஸ்
பிஃபா தரவரிசை: 5
சிறப்பான செயல் திறன்: 1966-ம் ஆண்டு தொடரில் 3-வது இடம்.
கடைசி உலகக் கோப்பை: 2022
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 8
தகுதி பெற்ற விதம்: ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தகுதி சுற்றில் எஃப் பிரிவில் முதலிடம் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. அர்மேனியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை வாய்ப்பை உறுதி செய்திருந்தது.
நட்சத்திரங்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோ, புருனோ பெர்னாண்டஸ், நுனோ மென்டிஸ்.
ஒட்டுமொத்த செயல் திறன்: 35 ஆட்டங்கள், 17 வெற்றி, 6 டிரா, 12 தோல்வி, 61 அடித்த கோல்கள், 41 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 17 vs காங்கோ
ஜூன் 23 vs
உஸ்பெகிஸ்தான்
ஜூன் 27 vs கொலம்பியா
காங்கோ
பயிற்சியாளர்: செபாஸ்டியன் டெசாப்ரே
பிஃபா தரவரிசை: 45
சிறப்பான செயல் திறன்: 1974-ம் ஆண்டு தொடரில் லீக் சுற்றுடன் வெளியேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 1974
பங்கேற்ற உலகக் கோப்பை: 1
தகுதி பெற்ற விதம்: மெக்சிகோவின் குவாடலஹாராவில் நடைபெற்ற பிளே-ஆஃப் போட்டியின் ‘ஏ’ பிரிவு இறுதி ஆட்டத்தில், கூடுதல் நேரத்தில் ஜமைக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காங்கோ அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியானது, 1974-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கோ அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்பதை உறுதி செய்தது.
நட்சத்திரங்கள்: சான்சல் எம்பெம்பா, செட்ரிக் பகாம்பு, ஜான் விஸ்ஸா
ஒட்டுமொத்த செயல் திறன்: 3 ஆட்டங்கள், 0 வெற்றி, 0 டிரா, 3 தோல்வி, 0 அடித்த கோல்கள், 14 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 17 vs போர்ச்சுகல்
ஜூன் 23 vs கொலம்பியா
ஜூன் 27 vs உஸ்பெகிஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
பயிற்சியாளர்: ஃபேபியோ கன்னவாரோ
பிஃபா தரவரிசை: 50
பங்கேற்ற உலகக் கோப்பை: முதன் முறையாக பங்கேற்பு
தகுதி பெற்ற விதம்: உஸ்பெகிஸ்தான் அணி உலகக் கோப்பைக்கு முதல் முறையாகத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது. கடுமையான ஆசிய கால்பந்து தகுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தான் 10 ஆட்டங்களில் 6 வெற்றிகளை குவித்து 2வது இடம் பிடித்து உலகக் கோப்பை தொடரில் கால்பதித்தது.
நட்சத்திரங்கள்: அப்துகோடிர் குசனோவ், ஹுஸ்னிடின் அலிகுலோவ், எல்டர் ஷோமுரோடோவ்
ஒட்டுமொத்த செயல் திறன்: 3 ஆட்டங்கள், 0 வெற்றி, 0 டிரா, 3 தோல்வி, 0 அடித்த கோல்கள், 14 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 17 vs கொலம்பியா
ஜூன் 23 vs போர்ச்சுகல்
கொலம்பியா
பயிற்சியாளர்: நெஸ்டர் லாரேன்சோ
பிஃபா தரவரிசை: 13
சிறப்பான செயல் திறன்: 2014-ம் ஆண்டு கால் இறுதி வரை முன்னேற்றம்
கடைசி உலகக் கோப்பை: 2018
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 6
தகுதி பெற்ற விதம்: கடும் போட்டி நிறைந்த தென் அமெரிக்க தகுதிச் சுற்றில் மூன்றாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் கொலம்பியா உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. 18 போட்டிகள் விளையாடிய கொலம்பியா 28 புள்ளிகளை பெற்றிருந்தது.
நட்சத்திரங்கள்: லூயிஸ் தியாஸ், ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், டேவிட் ஓஸ்பினா.
ஒட்டுமொத்த செயல் திறன்: 22 ஆட்டங்கள், 9 வெற்றி, 3 டிரா, 10 தோல்வி, 32 அடித்த கோல்கள், 30 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 17 vs உஸ்பெகிஸ்தான்
ஜூன் 23 vs காங்கோ
ஜூன் 27 vs போர்ச்சுகல்

More Stories
ஓய்வு அறிவிக்கப் போகிறாரா பென் ஸ்டோக்ஸ்? – பரபரப்பாகும் நைட் கிளப் விவகாரம்!
ரோஹித், பாண்டியா ஒருநாள் தொடருக்கு தயார்
குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே அணிகள் எப்படி? | FIFA WC 2026