May 21, 2026

செங்கோட்டையன் இலாகா மாற்றம் – தமிழக அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை?

சென்னை: தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏ.,க்கள் உள்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தொடர்ந்து அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தமுறை கே.ஏ.செங்கோட்டையனுக்கு நிதித் துறை வழங்கப்பட்ட நிலையில் அவரது துறை மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, கே.ஏ.செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் வசம் இருந்த நிதித்துறை மற்றும் ஓய்வூதியத் துறை மரிய வில்சனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பிற அமைச்சர்களுக்கான துறை பின்வருமாறு:

>> ஸ்ரீநாத் – மீன்வளத் துறை

>> எஸ்.கமலி – கால்நடை வளர்ச்சித் துறை

>> சி.விஜயலக்‌ஷ்மி – பால்வளத்துறை

>> ஆர்.வி.ரஞ்ஜித்குமார் – வனத்துறை

>> வினோத் – வேளாண் துறை

>> ராஜீவ் – சுற்றுசூழல், மாசுகட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றம்

>> பி.ராஜ்குமார் – வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை

>> வி.காந்திராஜ் – கூட்டுறவுத் துறை அமைச்சர்

>> மதன்ராஜ்.பி – குறு,சிறு,நடுத்தரத் தொழில்துறை

>> ஜெகதீஸ்வரி.கே – சமூக நலத்துறை, மகளிர் மேம்பாட்டுத் துறை

>> ராஜேஷ்குமார்.எஸ். – சுற்றுலா துறை

>> எம்.விஜய் பாலாஜி – நெசவு, கைத்தறித் துறை

>> லோகேஷ் தமிழ்ச்செல்வன் – வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை

>> விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்துத் துறை

>> ரமேஷ் – இந்து சமய அறநிலையத் துறை

>> பெ.விசுவநாதன் – உயர்க் கல்வித் துறை

>> குமார்.ஆர் – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், இணைய சேவை துறை

>> தென்னரசு.கே – அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை

>> வி.சம்பத் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துற

>> முகமது ஃபர்வாஸ் – தொழிலாளர் நலன் துறை

>> டி.சம்பத் குமார் – மனிதவள மேம்பாட்டுத் துறை

>> விக்னேஷ்.கே – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 16-ம் தேதி 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டது. மேலும், ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன் சுமை மற்றும் நீர்ப்பாசனம், நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்டவை உள்ளன.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணி (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது.

அமைச்சர் அருண் ராஜுக்கு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டது.

அமைச்சர் வெங்கட் ரமணனுக்கு உணவு, பொது விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு துறைகள் ஒதுக்கப்பட்டது.

அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்பு, சட்டப்பேரவை, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.

அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படச் சட்டம், செய்தித்தாள் அச்சுத்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம் உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டன.

அமைச்சர் டி.கே.பிரபுவுக்கு சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை ஒதுக்கப்பட்டது.

அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலவரப்படி தமிழக அமைச்சரவையின் பலம் 33 ஆக அதிகரித்துள்ளது.

Spread the love