சென்னை: சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ. எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை நீர்வழி போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த முடிவு. விருப்பம் உள்ள நிறுவனங்கள் அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான டி.எஃப்.ஆர் (DFR) மற்றும் டி.பி.ஆர் (DPR) தயாரிப்பதற்கான டெண்டரைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரியுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ திட்டம் என்பது கடந்த ஆட்சிக் காலத்திலேயே, ஒரு 25 ஆண்டு காலப் போக்குவரத்துத் திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தது.
இந்த நிலையில், எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ எனப்படும் நீர்வழிப் போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காகத் தற்பொழுது டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னை நேபிர் பாலத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக மகாபலிபுரம் வரையிலான வாட்டர் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவற்றுக்கான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்காகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது டெண்டர் கோரியுள்ளது.

More Stories
“காவிரி விவகாரத்தில் இன உணர்வாளர்களை தூண்டிவிட்டு பந்த்” – கர்நாடகா முதல்வர் மீது பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு
அனைத்து குவாரிகளையும் அரசே நடத்தக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ காலியிடங்களை 3,000 ஆக உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்