சோழவந்தான் மே 19
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா பிரசித்தி பெற்றது தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா சிறப்புமிக்கது. இந்த ஆண்டுக்கான வைகாசி பெருந்திருவிழா திங்கள் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவை ஒட்டி திருக்கோவில் முன்பாக சிறப்பு யாகம் செய்யப்பட்டது தொடர்ந்து கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தர்ப்பை பூமாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை சுமந்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி தங்களது வேண்டுதலை துவக்கினர். தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி ராஜா தக்கார் சங்கரேஸ்வரி கணக்கர் பூபதி ஆலய பணியாளர்கள் கவிதா வசந்த் சுபாஷினி பெருமாள்மற்றும் பக்தர்கள் செய்தனர் இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வாடிப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பால்பாண்டியன் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் கவுன்சிலர் கொத்தாலம் செந்தில் வேல் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சோழவந்தான் போலீசார் செய்திருந்தனர் வருகின்ற 26 ஆம் தேதி பால்குடம் அக்னி சட்டி நிகழ்ச்சியும் 27 ஆம் தேதி சோழவந்தான் மந்தை களத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் ஜூன்
2 ஆம் தேதி தேரோட்டம் நிகழ்ச்சியும் 3ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது

More Stories
உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: வீரபாண்டியன் வலியுறுத்தல்
சோழவந்தான் அருகே மேல்நாச்சிகுளம் அருள்மிகு மலையாள கருப்பண்ணசாமி காளியம்மாள் சீனிவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக தொழிலதிபர் எம் வி எம் மருது பாண்டியன் மூன்றாவது முறையாக தேர்வு