September 23, 2026

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி-தேனி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமையத்தின் முன்பு, அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேனி மாவட்டத்தில் என்.டி.ஏ.கூட்டணி சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் லோகிராஜன், கம்பம் தொகுதி வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையன்,போடி தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் வி.டி.நாராயணசாமி, மற்றும் பெரியகுளம் சட்டமன்ற  தொகுதி அ.ம.மு.க.வேட்பாளர் டாக்டர் கதிர்காமு ஆகியோர்களை அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரம் செய்தார். அப்போது டி.டி.வி தினகரனும் பிரச்சாரம் மேற்கொண்டார்.அ.தி.மு.க.மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர, பேரூர் நிர்வாகிகள், அ.ம.மு.க.மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட என்.டி.ஏ.கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு , எடப்பாடி பழனிச்சாமி, டி.டி.வி.தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Spread the love