August 31, 2026

த.வெ.க.சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி 

திருப்பூர்,ஆக.31

தமிழக வெற்றிக் கழகம் திருப்பூர் வாலிபாளையம் பகுதி கழகம் 35- வது வார்டு சார்பாக நம் வார்டு நம் பொறுப்பு திட்டம் துவக்க விழா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சிங்கப் பெண் 2026-ன் படி முதல்

முறையாக 500 மகளிருக்கான மாரத்தான் போட்டி 35 வது வார்டு செயலாளர் என். பாக்ய லட்சுமி ஏற்பாட்டில் திருப்பூர் வளர்மதி பாலம் அருகே நடைபெற்றது.

மாரத்தான் போட்டியை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர், தெற்கு எம். எல். ஏ பாலமுருகன் தலைமையில் மாரத்தான் போட்டியை போட்டியை துவக்கிவைத்தார்.

இந்தநிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் யூனியன் மில் ரோடு, மணியகாரம்

பாளையம் வரை சென்று மீண்டும் நிகழ்ச்சி துவங்கப்பட்ட இடத்தில் முடிக்கப்பட்டது.முதல் பரிசை நிவேதா, இரண்டாம் பரிசு மீனாட்சி, மூன்றாம் பரிசு கீர்த்தனா ஆகியோர் பரிசுபெற்றனர்.இந் நிகழ்ச்சியில் வாலி பாளையம் பகுதி செயலாளர் சுபியான், பகுதி கழக இணை செயலாளர் யோகேஷ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அஸ்வின், வார்டு துணை செயலாளர் குப்புசாமி, இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், இணை அமைப்பாளர்கள் சுதாகர், தொண்டரணி அமைப்பாளர் மணிகண்டன், சுதா, மகளிர் அணி இணை அமைப்பாளர் சரண்யா, வார்டு செயற்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Spread the love