November 4, 2026

பழனி முருகன் மலைக் கோவிலில் ரோப் கார்  சேவை   தொடங்கியது

பழனி  நவம்பர் 4

 பழனி முருகன் மலைக் கோவிலில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட ரோப் கார் சரி செய்யப்பட்டு இன்று முதல் தொடங்கியது. பழனியில்  முருகன் மலைக் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவர வசதியாக ரோப் கார் உள்ளது. இந்த ரோப் கார்  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.  அதன் பின்பு பராமரிப்பு பணிகள்  நடைபெற்றது.  குறிப்பாக கியர்  பாக்ஸில் ஏற்பட்ட பழுதுகள் நீக்கப்பட்டது. புதிய உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டு நேற்று ரோப் கார்  சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் பின்பு  இன்ஜினியர்கள் ரோப் காரை ஆய்வு செய்து இயக்கம் மற்றும் பாதுகாப்பு உறுதி  செய்தனர். இன்று நவம்பர் 4 ந்தேதி  காலையில் ரோப் கார்  சேவை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தொடங்கியது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி பொறுப்பு வெங்கடேசன் பங்கேற்றார்.பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம் பக்தர்கள் மகிழ்ச்சி.. 

Spread the love