முப்படை தலைமை தளபதி ராஜா சுப்பிரமணி
புதுடெல்லி: முப்படை தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து நாட்டின் 3-வது முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றார்.
இவர் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து கடந்த 1985-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாக சேர்ந்தார். பல பிரிவுகளில் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர். ராணுவத் துணை தளபதியாக பணியாற்றிய இவர் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெற்றார்.
பாகிஸ்தான் மற்றும் சீனா நிலவரங்களை இவர் நன்கு அறிந்தவர் என்பதால், தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைமை செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
புதிய கடற்படை தளபதி:
இந்திய கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி ஓய்வு பெற்றதையடுத்து, நாட்டின் 27-வது கடற்படை தளபதியாக அட்மிரல் கிருஷ்ண சுவாமி நாதன் நேற்று பொறுப்பேற்றார்.

புதிய கடற்படை தளபதி கிருஷ்ண சுவாமி நாதன்
இவர் கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு சேர்ந்தார். கடற்படையில் சிறந்த பணிக்காக பரம் விசிஷ்ட் சேவா, அதி விசிஷ்ட் சேவா மற்றும் விசிஷ்ட் சேவா பதக்கங்களை இவர் வென்றுள்ளார்.

More Stories
இந்தியக் கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்து.. 15 செ.மீ உயரும் கடல் மட்டம்! புதிய ஆய்வில் அதிர்ச்சி!
இந்திய படையினரின் தீவிர கண்காணிப்பில் இருந்து தப்பிக்க தீவிரவாதிகளை அரசியல் கட்சியில் சேர அறிவுறுத்திய பாக். ஐஎஸ்ஐ
சிலிண்டர் விலை உயர்வு – பொதுமக்களுக்கு முதல் நாளே வந்த அதிர்ச்சி