ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மனிதவளத்துறையின் பொது மேலாளர் திரு.S.பார்த்திபன் அவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவ மாணவியரை வேலைக்குத் தேர்வு செய்ய வந்திருந்தனர். மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மின்னியல், மின்னணுவியல் மற்றும் கணினி துறையைச் சேர்ந்த மாணவ மாணவியர் சுமார் 154 பேர் இதில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன்-ஐ சேர்ந்த 110 பேர் மற்றும் பிற கல்லூரியிலிருந்து 5 மாணவ மாணவியர் மொத்தம் 115 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தங்களது இறுதி் ஆண்டு படிப்பை முடித்த பின் வேலையில் சேர உள்ளனர்.
வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பணி நியமன ஆணைகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் இன்ஸ்டிடியூசனின் செயலாளர், முதல்வர் ஆகியோர் வழங்கினார்கள்.
வேலை வாய்ப்பைப் பெற்ற மாணவ மாணவியரை கல்லூரியின் தாளாளர் திரு.கே.பி.இராமசுவாமி அவர்கள், நிரவாக அறங்காவலர் திரு.R.முத்துவேல் அவர்கள், செயலாளர் திருமதி.C.மஞ்சு அவர்கள் மற்றும் முதல்வர் Dr.R.மணி அவர்கள், அனைத்துத் துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டி, வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

More Stories
PALANI
பழனியில் உலக நன்மைக்காக மகா ருத்ர யாகம்
பழனி அருகே, வயலூரில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், அமைச்சர் அர.சக்கரபாணி, டாக்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்