செப்டம்பர் 5
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்துக்கு காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கி பேசும்போது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் கொடுத்தவுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தாமல் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விடுகிறார்கள். அரசியல் வாதிகளால் நிர்பந்திக்கப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்கிறார்கள். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள உத்தரவில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்றால் உயர்வகுப்பை சேர்ந்த 3 சாதியினர் சாட்சி சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவது இல்லை. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்தும், அந்த சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். இந்தியா முழுவதும் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. தீவிர விசாரணைக்கு பிறகே வழக்கு போட வேண்டும் என்று போலீசாருக்கு அரசு உத்தரவிட வேண்டும்’ என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் மகாஜன சங்க தலைவர் சந்திரன் ஜெயபால், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் எஸ் கர்ணன்தேவர், மாவட்ட அமைப்பு செயலாளர் அன்பு ரமேஷ், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், நாடார் பேரவை பொதுச்செயலாளர் சூலூர் சந்திரசேகரன், திருப்பூர் வாழ் ஏழாயிரம் பண்ணை நாடார் சங்கத்தின் செல்லப்பாண்டியன், முக்குலத்தோர் பாதுகாப்பு நலப்பேரவையின் தியாகராஜன், தேசிய நாடார் அமைப்பின் சிவாஜிராஜன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில இணை செயலாளர் சித்திரைவேல், திருப்பூர் மாவட்ட சிறு, குறு வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் கண்ணன், தமிழ்நாடு நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன் விஸ்வநாதன், சான்றோர் குல நாடார் முன்னேற்ற சங்கத்தின் உதயா வெங்கடேஷ், தமிழ்நாடு வணிகர் மகாஜன சங்கத்தின் மாவட்ட தலைவர் சேர்மன்துரை, அ.ம.மு.க. திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குமணன், காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு மாநில இளைஞரணி தலைவர் வசந்தகுமார், மாவட்ட தலைவர் மைக்கேல், காமராஜர் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தனபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்….

More Stories
கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்க்கு பாராட்டு கோயில்களில் செல்போனுக்கு ₹5 கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்திவிழாவில் அர்ஜுன் சம்பத் பேட்டி,,,
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம்…
திண்டுக்கல் மாவட்டம்