June 7, 2026

வெற்றி பெற்ற நாங்க அமைதியாக இருக்கின்றோம் : முக ஸ்டாலின் -உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழக வெற்றிக்கழகம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார். அந்த கூட்டத்தில் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பதிலடி கொடுத்து பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா

முக்கிய அம்சங்கள்:

முக ஸ்டாலின் -உதயநிதி ஸ்டாலின்

ஆதவ் அர்ஜுனா பதிலடி

தமிழக வெற்றிக்கழகம் மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகின்றது. தேர்தலுக்கு முன்பு தவெகவினர் திமுகவை கடுமையாக விமர்சித்து பரப்புரை செய்தனர். ஆனால் அதற்கு திமுகவை சேர்ந்தவர்கள் பெரிதும் ரியாக்ட் செய்தது கிடையாது. தற்போது தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக ஆட்சியமைத்ததில் இருந்து திமுக தொடர்ந்து ஆளும் கட்சியான தவெகவை விமர்சித்து வருகின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலினும் தனது அறிக்கை மூலம் தவெகவை விமர்சிக்கிறார்.

  

மறுபக்கம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மேடைகளில் தவெகவை குற்றம்சாட்டி முதலமைச்சர் விஜய்யை கடுமையாக பேசி வருகின்றார். சமீபத்தில் கூட திருச்சி கிழக்கு தொகுதியில் நன்றி தெரிவிக்கும் விழாவில் விஜய் ஆவேசமாக பேசியிருந்தார். அவரின் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவுண்டர் கொடுத்து பதில் விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

நான் மிரட்டவில்லை : சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தான கேள்வி:செங்கோட்டையன் பதில்
இந்நிலையில் தற்போது தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பதிலடி தந்துள்ளார். அவர் பேசியது, வெற்றி பெற்ற நாங்க அமைதியாக எங்கள் வேலையை செய்துகொண்டு வருகின்றோம். கடந்த ஐம்பது வருடங்களாக எல்லா துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. அதையெல்லாம் சரி செய்யும் வேலையில் இருக்கின்றோம். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் தினம் ஒரு கூட்டத்தை சேர்த்து மீட்டிங் போட்டு தவெகவின் வெற்றியை கொச்சைப்படுத்துகிறார்கள்.

தவெகவின் வெற்றி என்பது தமிழ்நாடு பெண்கள் மற்றும் இளைஞர்களின் வெற்றி. அந்த வெற்றியை நீங்கள் கொச்சைப்படுத்தினால் பெண்களை கொச்சைப்படுத்துவதாக அர்த்தம். எனவே தான் அதற்கு பதில் தர வேண்டும் என விரும்பினேன். முதலமைச்சர் மற்றும் பொதுச்செயலாளரிடமும் அனுமதி பெற்று தான் அவர்களுக்கு இந்த பதிலடியை தருகிறேன். தவெகவின் வெற்றி வரலாற்று வெற்றியாக இருக்கின்றது.

முக ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் கவர்ச்சியால் இந்த வெற்றி வந்தது என்கின்றனர். முக ஸ்டாலின் அவர்கள் கவர்ச்சிக்காக தானே உதயநிதி ஸ்டாலினை சினிமாவில் நடிக்க வைத்தார். கவர்ச்சி வந்ததா ?படிப்பும் வரவில்லை, சினிமாவும் வரவில்லை கடைசியில் அரசியலும் வரவில்லை. பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கக்கூடாது என நாங்கள் சொன்னோம். அதைப்போல மக்கள் மன்னர் ஆட்சியை ஒழித்துவிட்டார்கள்

தவெகவின் இந்த வெற்றி ஏன் வரலாறு வெற்றியாக இருக்கிறது தெரியுமா ? திமுக என்ற கட்சி பல தோல்விகளை சந்தித்துள்ளது. ஆனால் எப்போதும் திமுகவின் தலைவர் தோல்வியை சந்தித்தது கிடையாது. கலைஞர் ஒருபோதும் தோற்றது கிடையாது. ஆனால் முக ஸ்டாலின் தோல்வியை சந்தித்துவிட்டார் என பேசி திமுகவிற்கு பதிலடி கொடுத்தார் ஆதவ் அர்ஜுனா. அதுமட்டுமல்லாமல் முக ஸ்டாலின் மட்டும் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய்யின் பரப்புரைக்கு முறையாக அனுமதி கொடுத்திருந்தால் 59 தொகுதியில் திமுக டெபாசிட் இழந்திருக்கும்.

பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதியில் ஐந்து நிமிடம் தான் பேசினார் முதலமைச்சர் விஜய். அதற்கே திமுக அவுட் என பேசினார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா . இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு தவெக பத்து தொகுதியில் வெற்றிபெறுவதே கஷ்டம் என்றெல்லாம் பேசினார்கள். முறையாக பரப்புரைக்கு அனுமதி வழங்கவில்லை.அப்படி இருந்தும் நாங்கள் 108 தொகுதியில் வெற்றிபெற்றுவிட்டோம் என கூறி முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து அவர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கின்றார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love